About Akani

suresh(akani)

அகணி என்ற புனைபெயரில் எழுதி வரும் சி.அ.சுரேஸ் என்ற எழுத்தாளர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார். இவர் அறிவியல் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள், மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதைகள் என்பவற்றை எழுதி வருகின்றார். இவர் கவிச்சாரல்(புதுக்கவிதைத் தொகுதி), சாயி அமுதம்(மரபுக் கவிதைத் தொகுதி), நினைவாற்றல்(அறிவியல் நூல்), வெகுளாமை (அறிவியல் நூல்) ஆகிய நூல்களைக் கனடாவில் வெளியிட்டுள்ளார். அத்துடன் கனடாவில் “பொதிகைப் புதுமலர்கள்” என்ற மரபுக்கவிதைத் தொகுதியை உருவாக்கிய கவிஞர் எண்மரில் இவரும் ஒருவராவர். இவரது சில தெய்வீகப் பாடல் வரிகள் இந்தியக் கலைஞர்களால் பாடப்பட்டு “ஸ்ரீ சத்திய சாயி போற்றி” என்ற இசைத்தட்டாக இந்தியாவில் உருவாக்கப்பட்டது.
மேலும் சாயி அமுதம் என்ற நூலில் இடம்பெற்ற மூன்று கீர்த்தனைப் பாடல்கள் “சாயி அமுதம்” என்ற இசைத்தட்டாக அண்மையில் வெளிவந்தது. ஈழத்தில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பிரிவான விபுலானந்த இசைக் கல்லூரியின் விரிவுரையாளர் திருமதி ஜெயந்தி திசநாயக்க அவர்களின் தலைமையின் கீழ் இந்த இசைத்தட்டு உருவாகியது. பாடல்களை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன இசைத்துறை இயக்குனர் திரு. பகவத்சிங் நித்தியானந்தன் பாடியுள்ளார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் வாத்தியக் கலைஞர்கள் அணி சேர் இசைக்கலைஞர்களாக இசையினை வழங்கியுள்ளார்கள். மிக அண்மையில் “என்னவளே கொஞ்சுகிறாய்” என்ற ஒரு காதல் பாட்டை சினிமாப் படங்களில் வரும் பாடல்களின் தரத்தில் இயற்றி நண்பர் கோபி அவர்களால் பாட்டுக்கான மெட்டு உருவாக்கப்பட்டு சென்னையில் ACE மகேஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட இசையுடன் கனடாவில் வர்மன் அவர்களின் MIDI Melodies இல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. இப்பாடலைக் கனடாவைச் சேர்ந்த கோபி, நிருத்திகா ஆகியோர் பாடியுள்ளார்கள். இவரது ஆக்கங்கள் கனடாவில் இருந்து வெளிவரும் விளம்பரம் பத்திரிகை, தமிழ் மிரர் பத்திரிகை, முரசொலிப் பத்திரிகை, உதயன் பத்திரிகை, தூறல் சஞ்சிகை, தளிர் சஞ்சிகை, ஈழநாடு பத்திரிகை போன்றவற்றிலும் இந்தியாவில் இருந்து வெளிவரும் கவிதை உறவு என்ற சஞ்சிகையிலும், சிறுகதை.கொம், வார்ப்பு ஆகிய இணையத்தளங்களிலும் வெளிவந்துள்ளன.

saipottri

pothikai

image006

image004

image002

“ஸ்ரீ சத்திய சாயி போற்றி” இசைத்தட்டு அறிமுக விழா
கனடாவில் வசித்து வரும் சி.அ.சுரேஸ் அவர்கள் அகணி என்ற புனைபெயரில் கவிதை, கட்டுரை எனப் பல ஆக்கங்களைத் தமிழ் மொழியில் எழுதி வருகின்றார். “கவிச்சாரல்”;, “சாயி அமுதம்” என இரண்டு கவிதைத் தொகுதிகளையும் “நினைவாற்றல்” என்ற அறிவியல் நூலையும் கனடாவில் வெளியிட்டுள்ளார். “சாயி அமுதம்” என்ற நூல் யாப்பிலக்கண விதிகளுக்கமைய எழுதப்பட்ட மரபுக் கவிதைகளைக் கொண்ட ஒரு பக்தி இலக்கியப் படைப்பாகும். இந்த நூலிற்காக “அகணி” எழுதிய கீர்த்தனைகளில் சிலவற்றை அவர் இந்தியப் பாடகர்கள் மூலம் பாடச்செய்து “ஸ்ரீ சத்திய சாயி போற்றி” என்ற இசைத்தட்டை வெளிக்கொணர்ந்துள்ளார். இந்த இசைத்தட்டு பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் ஆச்சிரமம் அமைந்துள்ள புட்டபர்த்தியில் சாயி பகவானின் 87வது பிறந்த தின வெளியீடாக நவம்பர் 23, 2012 இல் வெளிவந்தது. இந்த இசைத்தட்டின் அறிமுகவிழா ஜனவரி 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை 63 பார்மசி அவெனியூ இல் அமைந்துள்ள Oakridge Community Recreation Centre இல் விக்டோரியா பார்க் சாயி நிலையத்தின் ஆடம்பரமற்றதும், பிரார்த்தனைகளுடன் இணைந்த நிகழ்வாக இனிதே நடைபெற்றது. நிகழ்வுக்கு முன்பாக சாயி பஜனையும், தீப ஆர்த்தியும் நடைபெற்று அறிமுக விழா ஆரம்பமாகியது. சாயி பக்தர்களும், இலக்கிய ஆர்வலர்களும் பங்கு பற்றிய இந்த நிகழ்ச்சியினைச் செல்வி சயனிகா சுரேஸ் திறமையாகத் தொகுத்து வழங்கினார். விக்டோரியா பார்க் சாயி நிலையத்தின் தலைவர் தர்மராஜா அவர்கள் தனது தலைமையுரையில் தமது நிலையத்தில் பாடலாசிரியர் அகணி சுரேஸ் அவர்களினதும், குடும்பத்தினரினதும் பங்களிப்பும், ஈடுபாடும் அளப்பரியது என்று குறிப்பிட்டதோடு, இசைத்தட்டின் மூலம் கிடைக்கும் பணம் முழுவதும் ஒரு நல்ல சேவைக்குப் பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த இசைத்தட்டை இசையமைத்தவர் சங்கீத வித்துவான் M.S.வித்யா அவர்கள். இசைத்தட்டில் உள்ள பாடல்களை M.S.வித்யா அவர்களும் அவரது குழுவினரும் மிகவும் சிறப்பாகப் பாடியுள்ளார்கள். பாடல் வரிகளும் மிகவும் நன்றாக அமைந்திருப்பதாக பலரும் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். அடுத்ததாக நிகழ்வில் உரையாற்றிய அகணி சுரேஸ் அவர்கள் இசைத்தட்டின் உருவாக்கம் பகவான் சாயியின் அருளினால் மட்டுமே சாத்தியமானதெனக் குறிப்பிட்டதோடு இசைத்தட்டிற்கான பதிவு நிறைவுற்ற நாளில் பாடகர்களின் கனவில் பகவான் சாயி தோன்றி ஆசி வழங்கியமை பற்றியும் தனது உரையில் குறிப்பிட்டார். மேலும் கனடாவில் வாழ்ந்து வருகின்ற திரு ராஜசிங்கம் அவர்களின் மனப்பூர்வமான பணியினால் அவர் மூலமாகவே இந்த இசைத்தட்டு உருவாக்கம் நடைபெற்றதெனவும் குறிப்பிட்டார். அங்கு உரையாற்றிய திரு ராஜசிங்கம் அவர்கள் இசைத்தட்டு உருவாக்கத்தின் பின்னணியை எடுத்து விளக்கினார். மேலும் அகணி சுரேஸ் அவர்களின் பாடல் வரிகள் மிகவும் நன்றாக இருந்ததாக இசையமைப்பாளர்கள் கூறியதாகச் சபையில் கூறியதோடு இசைத்தட்டில் பங்குபற்றிய இசைக்கலைஞர்களுக்கும், தனக்கு உதவி புரிந்த ஏனையோருக்கும் நன்றி தெரிவித்தார். அடுத்து அவையில் இசைத்தட்டில் இருந்து சில பாடல்களின் பகுதிகள் இசைக்கப்பட்ட பொழுது இசைத்தட்டின் சிறப்பை அவையோர் நன்கு அறிந்து கொண்டனர். நிகழ்வில் அகணி சுரேஸ் அவர்களின் யாப்பிலக்கண ஆசான்களான கவிநாயகர் வி. கந்தவனம், பண்டிதர் ம.செ.அலெக்ஸ்சாந்தர் ஆகியோர் வாழ்த்துரைகள் வழங்கிச் சிறப்பித்தனர். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தினால் நடைபெற்ற யாப்பிலக்கணப் பயிற்சிப் பட்டறை மூலம் அகணி போன்று பயிற்சி பெற்ற பல கவிஞர்களும் நிகழ்வில் பங்கு பற்றியதோடு அவர்களால் உருவாக்கப்பட்ட கனடா தமிழ் கவிஞர் கழகத்தின் தலைவர் மாவிலி மைந்தன் சண்முகராஜா ஒரு வாழ்த்து மடலைக் கவிஞர் குழாமுடனும், ஆசான்களுடனும் சேர்ந்து பாடலாசிரியர் அகணி அவர்களுக்கு வழங்கினார்கள். இசைத்தட்டினை திரு ராஜசிங்கம் வெளியிட சிறப்புப் பிரதிகளை திருவாளர்கள் தர்மராஜா, கந்தவனம், அலெக்ஸ்சாந்தர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதனையடுத்து அகணி சுரேஸ், ராஜசிங்கம் ஆகியோர் இணைந்து நிகழ்வில் பங்குபற்றிய விருந்தினர்களுக்கு “ஸ்ரீ சத்திய சாயி போற்றி” இசைத்தட்டுக்களை வழங்கினார்கள். இந்த நிகழ்வு ஒரு பக்தி கலந்த நிகழ்வாக இனிதே நிறைவேறியது.
நன்றி தமிழ் CNN

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s